Skip to main content

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

காண்க: http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1

இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது.

முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின.

ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது.

இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூபா, வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகளும், பாகிஸ்தான், மாலத்தீவுகள், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இஸ்லாமிய நாடுகளும் இலங்கையை காப்பாற்ற பலகட்ட முயற்சிகளை வலிந்து மேற்கொண்டன.

பாகிஸ்தான் இந்த தீர்மானத்தை எதிர்த்து இரண்டு முட்டுக்கட்டைகளை போட்டது.

1. முதலில் "தீர்மானமே தேவை இல்லை" என்கிற "No-Action" (எதிர் தீர்மானத்தை) பாகிஸ்தான் முன்மொழிந்தது. இதை கியூபாவும், ரசியாவும் கூட்டாக வழிமொழிந்தன. இந்தியா பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து வாக்களித்தது. மொத்தம் 16 நாடுகள் இலங்கைக்கு சார்பாகவும். 25 நாடுகள் இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்தன. 

எனவே 23 - 16 என்ற வித்தியாசத்தில் தீர்மானத்தை தடுக்கும் மேற்கண்ட இலங்கையின் நட்பு நாடுகளின் முயற்சி தோல்வி அடைந்தது.

http://www.ohchr.org/en/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=14447&LangID=E

2. சற்றும் மனம் தளராத பாகிஸ்தான், இரண்டாவதாக பன்னாட்டு விசாரணையை கோரும் தீர்மானத்தின் முக்கியமான பத்தாவது பத்தியை நீக்க கோரி மற்றுமொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதையும் கியூபா, ரசியா ஆகிய நாடுகள் ஆதரித்து பேசின. இந்தியா மீண்டும் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்து வாக்களித்தது. 

ஆனால் 23 - 14 என்ற எண்ணிக்கையில் அதுவும் தோற்கடிக்கப்பட்டு பன்னாட்டு விசாரணையை கோரும் பத்தி தொடர்ந்து தீர்மானத்தில் தக்கவைக்கப்பட்டது.

மேற்கண்ட இரண்டு நகர்வுகளுமே இலங்கையின் நட்பு நாடுகளாகிய பாகிஸ்தான், சீனா, ரசியா, கியூபா ஆகியவையின் பிடிவாதமான வாக்குவாதங்களினால் வந்தவை. ஆனால் இரண்டுமே தோற்கடிக்கப்பட்டன.

பின்னர் மூல தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு தொடங்கியது. "வாக்கெடுப்பு தொடங்கிவிட்டது" என்று அவையின் தலைவர் பாடெலேர் (Baudelaire Ndong Ella) அறிவித்த பின்னரும் சீனா குறுக்கிட்டு இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கிற தவறான முன்னுதாரணம் என்று முரண்டு பிடித்தது. அதை அவை தலைவர் விதிமீறல் என்று மறுத்து சீனாவை அமைதிப்படுத்தி, வாக்கெடுப்பை தொடங்கினார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரும் இந்த தீர்மானத்திற்கு மெக்சிகோவும், பிரேசில் உட்பட தென் அமெரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன.(வெனிசுவேலா எதிர்த்தது).
ஜெர்மனி, பிரான்சு போன்ற முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்நிலையில் இலங்கையில் நடந்தது உள்நாட்டு பிரச்சனை எனவே அதுகுறித்து உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவருவது தவறு என்று கூறி மொத்தம் 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. 

இலங்கையை ஆதரித்ததில் பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவு போன்ற இஸ்லாமிய நாடுகளும், சீனா, கியூபா, வியட்நாம், ரசியா போன்ற கம்யூனிச நாடுகள் முக்கியமானவை.



இஸ்லாமிய நாடுகளின் பொதுவான அமெரிக்க எதிர்ப்பும், கம்யூனிச நாடுகளின் அமெரிக்க எதிர்ப்பும் பரவலாக அறியப்பட்டவைதான் என்றாலும்.. இதில் இரண்டு விதிவிலக்குகள் உண்டு.

பாகிஸ்தான் பிற இஸ்லாமிய நாடுகள் போல அல்லாமல் இலங்கைக்காக கடுமையாக வாதிட்டு வாக்கெடுப்பின் போக்கை மாற்ற கடுமையாக முயன்றது. 

இந்தியா எதிரி நாடான பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்து இலங்கைக்காக கோடி பிடித்தது. பன்னாட்டு விசாரணை என்பது இலங்கை இது வரை செய்துள்ள வளர்ச்சி பணிகளை அலட்சியப்படுத்தும் செயல் என்றும், உள்நாட்டு விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் செயல் என்றும் கூறி தீர்மானத்தை புறக்கணித்தது. 

இலங்கையுடன் பல ஆயிரங்காலமாக தொடர்பில் உள்ள, அதி நெருக்கமான நட்பு நாடு என்கிற காரணத்தினால் இந்தியா இதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக உலக அரங்கில் இலங்கைக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது, தமிழ்நாட்டு தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம் ஆகும்.

காண்க: https://www.youtube.com/watch?v=vCNslDmsMy4

வாக்கெடுப்பை இந்தியா ஏன் புறக்கணித்தது என்பதின் முழு விளக்கம் இங்கே:
http://ibnlive.in.com/news/india-abstains-from-voting-against-sri-lanka-at-unhrc/460666-3.html



இறுதியாக 23 ஆதரவு, 12 எதிர்ப்பு, 12 புறக்கணிப்பு  - ஆக 11 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் வெற்றி அடைந்தது.

இந்த தீர்மானத்தின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய கருத்துக்கள் அடுத்த பதிவில்.

Comments

Popular posts from this blog

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற...

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம் நாள்: 02 மார்ச் , 2013 , மாலை 4.00 மணி இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். 1.        T.S.S மணி, மனித உரிமை போராளி 2.        இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர் 3.        மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர் 4.        நாகராஜன், Global Tamil Organization 5.        செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்     மேலும் பலர்  கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன: T.S.S. மணி : ·         இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்...