Skip to main content

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்


இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம்

நாள்: 02 மார்ச், 2013 , மாலை 4.00 மணி
இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர்

இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்.

1.       T.S.S மணி, மனித உரிமை போராளி

2.       இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர்

3.       மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர்

4.       நாகராஜன், Global Tamil Organization

5.       செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் 

   மேலும் பலர் கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன:

T.S.S. மணி :
·        இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் போர்குற்ற புலனாய்வு நடந்தாலும் அதன் ஒரு பகுதியான “இனப்படுகொலை போர் குற்றம் (Genocidal War Crimes) வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் போர்குற்ற விசாரணை என்ற பெயரை கேட்டு குழப்பம் அடைய வேண்டாம்
·        மேலும் தமிழர்கள் வலியுறுத்த வேண்டியது, விசாரணை அல்ல.. விசாரணை என்பது ஆய்வறிக்கையில் போய் நிற்கும். ஆனால் செய்யப்பட வேண்டியது புலனாய்வு ஆகும்.. ஏனென்றால் புலனாய்வு என்பது குற்றப்பத்திரிக்கையில் சென்று நிற்கும். அதன் மூலம் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

மரு. வேலாயுதம்:
·        இங்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவைகளை விளக்கினார். தமிழர்கள் ஒன்று கூடாமல் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் குறை சொல்வதில் பயன் இல்லை என்று விளக்கினார்

இரா. அருள்
·         இலங்கையின் உள்நாட்டு புலனாய்வு முறைகள் யாவும் தோல்வி அடைந்தவை. அவை யாருக்கும் நியாயம் வழங்காது. எனவே சர்வதேச புலனாய்வு செய்வதின் மூலமாக மட்டுமே இலங்கையில் நடந்த கொடூரங்களை உலக அரங்கில் அதிகாரபூர்வமாக நிறுவ முடியும்.
·        
   முதல்  கட்டமாக இது ராஜபக்சேவுக்கும், அதன் மூலம் இலங்கைக்கும் பெருத்த பின்னடைவை உண்டாக்கும். பல நாடுகளுக்கு பயண தடை கூட பெற முடியும். அது இலங்கை மீது மேலும் நெருக்கடி கொடுப்பதற்கான முகாந்திரங்களை வழங்கும்.  எனவே உள்ள ஆதாரங்கள் அனைத்தும் பன்னாட்டு தற்சார்பு உள்ள பன்னாட்டு புலனாய்வுக்கு மிக விரைவில் உள்ளாக்குவது மிகவும் அவசியம்.
·        
   இலங்கைக்கு எதிராக இந்த ஆண்டு கொண்டு வரப்படும் எந்த தீர்மானமும் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் இலங்கை மீது நாம் தொடர்ந்து பல பன்னாட்டு முன்னெடுப்புகளை செய்ய முடியும்.

இந்த கூட்டத்தில் ஐநா மன்றத்தில் இலங்கைக்கு நெருக்கடி உண்டாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த திட்டமிடலுடன், பல்வேறு அமைப்புகள் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.













நன்றி!!


மேலும் தகவல்களுக்கு:

சூரிய பிரகாசு (98409 92689), இராசா ஸ்டாலின் (98848 77487)


உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Comments

Popular posts from this blog

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க:  http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூ...

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற...