Skip to main content

Posts

Showing posts from June, 2014

பொலீவியா விருதும், ஜோர்டான் விஜயமும்..

பொலீவியா தனது அதிஉயர் மனிதநேய, சனநாயக விருதை இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு வழங்கி இருப்பதை இப்போது தமிழர்கள் பரவலாக எதிர்ப்பதும், கவலை தெரிவிப்பதும் காண முடிகிறது.  பொலீவியாவின் செயலை எதிர்ப்பதும், புறக்கணிப்பதுமே சரியான எதிர்வினையாக இருக்கும் என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையில் அதை தாண்டிய நான்கு முக்கியமான வேலைகள் நம் கண்முன் நிற்கின்றன. 1. புலிகளின் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையினை ஆராய்ந்து, அதை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் முறைகளை நாம் ஆராய வேண்டும். புலிகளின் மீதான தடை நீக்கப்பெருதல் அனைத்திலும் முதன்மையான தேவை ஆகும். உலகெங்கிலும் விரைந்து செயல்பட முடியாமல் தேங்கி நிற்கும் பல உண்மை உணர்வாளர்களுக்கு கட்டுடைத்ததை போல ஆகும். ஐநா விசாரணை தொடங்க உள்ள இந்த நிலையில், மேலும் பலர் துணிவுடன் சாட்சிகளாக முன்வருவார்கள். இல்லாத போது இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய சட்டப்படியான தடையை கருதி தயங்க கூடும். 2. வடக்கிலும் – கிழக்கிலும் ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நிலங்களின் மீதே...