இணையவழி குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கள்ளமௌனம் காத்து வந்தது மே 17 இயக்கம். எனவே நேற்று இரவு அவர்கள் தி.நகரில் நடத்திய கூட்டத்தில் நேரில் சென்று அச்சு பிரதிகளாக எங்கள் கேள்விகளை கொடுத்து கேள்வி எழுப்பி இருக்கிறோம்.
சில மணிகளுக்கு முன்பு (16.03.2014) தி.நகரில் நடந்த மே பதினேழு இயக்கத்தின் கூட்டத்தில் நானும் தோழர் ராஜா ஸ்டாலினும் கலந்து கொண்டு அவர்கள் முன்வைக்கும் தவறான கொள்கையை சுட்டிக்காட்டும், கேள்வி எழுப்பும் விளக்க கட்டுரையை வந்திருந்தவர்களிடமும், ஒருங்கிணைப்பாளர்கள் Thirumurugan Gandhi மற்றும் Umar Chennai ஆகியோருக்கும் கையளித்தோம்.
அமெரிக்கா எனும் பூச்சாண்டியை பூதக்கண்ணாடி வைத்து பெரிது படுத்தி, அதன் மூலம் இந்தியா, சீனா, ரசியா, ஜப்பான் உட்பட உலக நாடுகளை, ஏன் சொல்லப்போனால் இலங்கை அரசை கூட இரண்டாம் கட்ட எதிரிகளாக பாவமன்னிப்பு கொடுக்கின்றனர். இதன் மூலம் உண்மையான் எதிரிகளை தப்ப வைத்து இரண்டாம் எதிரியான அமெரிக்காவை முதல் எதிரியாக காட்டும் மடைமாற்று வேலையை செய்கின்றனர்.
அமெரிக்கா அயோக்கியன் என்ற போதும், அவனை விட ஈழ துரோகத்தில் முந்தி நிற்கும் இந்தியா, சீனா, ரசியா, கியூபா போன்ற நாடுகளை கேள்வி கேட்காமல் அமெரிக்காவை மட்டுமே முன்னிறுத்தும் மர்மத்தை அவர்கள் இப்போதேனும் விளக்க வேண்டும்.
50,000 கோடிக்கு ரயில் பாதை அமைத்து கொடுக்கும் இந்தியா உத்தமனான கதையை நாம் அறிந்தே ஆகவேண்டும்.
"உயிரை கொடுத்தேனும் இலங்கையை காப்பேன்" என்று சபதம் இடும் கம்யூனிச நாடுகள், இஸ்லாமிய நாடுகள் "நல்லவன்" பட்டியலில் இணைந்த அதிசயத்தை இவர்களே விளக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் அமெரிக்காவே முதன்மை துரோகி என்கிற அரைவேக்காட்டு அரசியல் நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.
இந்தியாவே முதல் எதிரி, இந்தியாவை நோக்கியே நமது முதல் கவனம் இருக்க வேண்டும் என்கிற நியாயமான அரசியல் நிலைப்பாட்டுக்கு அவர்கள் வரும் வரை எங்கள் கேள்விகள் ஓயாது.
பார்க்கவில்லை,தெரியாது என்றெல்லாம் இந்த முறை பதில் சொல்ல முடியாது. நாங்கள் இருவரும் நேரில் சென்று அனைவரின் கண் முன்னாலே கேள்விகளை அச்சுபிரதியாக கொடுத்திருக்கிறோம். இதற்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் சனநாயக கடமைகள் பற்றி பேசவோ, கருத்துரிமை பற்றி பேசவோ, கள்ளமௌனம் காக்கும் உலக நாடுகளை, இந்தியாவை கேள்வி கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.
பார்க்கலாம் இந்த முறையேனும் பதில் வருகிறதா என்று.. நாங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் கேள்விகள் அடங்கிய கட்டுரை இங்கே உங்கள் பார்வைக்கு..
http://eelamfight.blogspot.com/2014/03/blog-post_16.html

Comments
Post a Comment