Skip to main content

ஐநா விதி 99 என்கிற ஏமாற்று பிரச்சாரம் - UNSG Article 99 and its deliberate misinterpretation and disinformation

ஐநாவின் 99 ஆவது சட்ட விதியின் படி அதன் பொது செயலாளர் இனப்படுகொலைக்கான விசாரணையை தொடங்க முடியும் என்றும், அதை தொடர்ந்து தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் சிலர் இங்கு தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இது ஒரு பொய் பிரச்சாரம்.. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..

இது பற்றிய ஒரு விளக்கம் இங்கே..

99 ஆவது சட்ட பிரிவு என்பது என்ன?

United Nations என்ற ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னர் இருந்த League of Nations அமைப்பின் நீட்சியாகவே திருத்தியமைக்கப்பட்ட ஒரு அதிகாரம் ஐநாவின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்டது. அதன் சட்ட வரையறைகள் பற்றிய ஆங்கில பதிவு இங்கே..

"The Secretary-General may bring to the attention of the Security Council any matter which in his opinion may threaten the maintenance of international peace and security

இதன் தோராயமான தமிழாக்கம் இதோ:

"உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடிய நிகழ்வுகளை தனது சுய மதிப்பீட்டின் அடிப்படையில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் கவனத்திற்கு கொண்டு வரலாம்"

Ref: http://www.un.org/en/documents/charter/chapter15.shtml

பான்-கி-மூனின் இலங்கை பற்றிய "சுய மதிப்பீடு" எப்படி இருக்கும்?

சிங்கள அரசுடன் மிக நெருக்கமான உறவு கொண்டு, அவர்களை தொடர்ந்து பன்னாட்டு அரங்கில் காப்பாற்றி வருபவர் பான்-கி-மூன் என்பது தமிழகத்தின் சிறு பிள்ளைக்கும் தெரியும்.

இதில் இறுதி பத்தி வாசிக்க : Ref: http://en.wikisource.org/wiki/Page%3AReport_of_the_Secretary-General's_Panel_of_Experts_on_Accountability_in_Sri_Lanka.pdf/8

அதனால் இலங்கையில் நடந்த இத்துணை பெரிய இன அழிப்பை மட்டும் அல்ல, இன்னும் இதை விட கொடூரமாக பல அட்டூழியங்கள் அங்கு நடந்தாலும் அவர் அதை "அவரது சுய மதிப்பீட்டில்" கவனிக்கப்பட வேண்டிய விடயமாக பாதுகாப்பு அவைக்கு தெரிவிக்க போவது இல்லை.

இவரின் பதவி காலம் ஜூன் 2016 வரை தொடரவே போகிறது. இதில் இவரிடம் இருந்து பரிந்துரைகள் பெற நினைப்பது வெறும் தண்ணீரை கடைந்து நெய் எடுக்கும் வேலை.

மேலும் ஐநா பொது செயலாளர்கள் பல பன்னாட்டு பிரச்சனைகளை பாதுகாப்பு அவையின் கவனத்திற்கு கொண்டு சென்று இருந்த போதும் மொத்த வரலாற்றில் மூன்று முறையே "99 ஆவது சட்ட விதி" அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டது. அவை 1960ல் காங்கோவில், 1979 ஈரானில், 1989 லெபனன் நாட்டில். இந்த மூன்று நிகழ்வுமே எந்தவித "இனப்படுகொலை விசாரணைக்கோ", "பொது வாக்கேடுப்புக்கோ", "புது நாடு உருவாவதற்கோ" வழிகோலவில்லை.

Refer Chapter 14, Pages 305-344: Conflict Prevention from Rhetoric to Reality, Volume II: Opportunities and Innovations ( http://books.google.co.in/books?id=3ud6x_yfB3UC&printsec=frontcover#v=onepage&q&f=false )

உண்மை இப்படி இருக்கையில் 99 ஆவது விதி தனி ஈழம் உருவாக்கும் என்று இவர்கள் பூ சுற்றுவது யார் காதில் என்ற கேள்வியே எழுகிறது.

ஒருவேளை அவர் பரிந்துரை செய்தால்?

ஒருவேளை அவர் பரிந்துரை செய்தாலும் அது ஐநாவின் பாதுகாப்பு அவையின் கவனத்துக்கு மட்டுமே கொண்டு செல்லப்படும்.. அன்றியும் எந்தவித அரசியல்/ராணுவ நடவடிக்கையையும் வலியுறுத்தும் அளவுக்கு எந்தவித அதிகாரமும் அவருக்கு வழங்கப்படவில்லை.

"bring to the attention " - "கவனத்துக்கு கொண்டு வரலாம்" என்றே உள்ளது. 

கடந்த காலங்களில் இது போல கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அந்த ஐநா பாதுகாப்பு அவையில் வீட்டோ அதிகாரத்துடன் இருக்கும் சீனா, ரசியா ஆகிய இலங்கையின் நட்பு நாடுகள் தடுத்துவிடும். மிக சமீபத்தில்  கூட க்ரைமியா பகுதியை தன்னுடன் சட்ட விரோதமாக ரசியா இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை 13 நாடுகள் ஆதரித்த  போதும், தனது ஒற்றை வீட்டோ அதிகாரத்தை கொண்டு ரசியா தகர்த்து மண்ணோடு மண்ணாக ஆக்கியது. ஈழ விடயத்தில் இதையே ரசியாவும், சீனாவும் சேர்ந்து செய்யும்.

எனவே 99 ஆவது சட்ட விதி என்கிற இல்லாத ஊருக்கு தமிழர்களை இட்டுச்செல்லும் வேலைகளை இங்குள்ள அரைகுறை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் குறைந்தபட்சம்  இந்த விளக்கங்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

This article talks about the deliberate misinterpretation and disinformation campaign set about in some sectors of Tamils that claim to fight for Tamil Eelam. Though the author fully believes that what happened in Sri Lanka is an outright genocide of ethnic Tamils by the Sri Lankan state terrorism, the usage of article 99 by the United Nations Secretary-General will not earn any fruitful results. Instead it will lead Tamils on a unduly long journey to a dead end.

The article in Tamil talks about the two specific clauses set about in Article 99 viz.. (1) leaving it to the discretion of the UNSG to decide what is threatening global peace and security, as there is no guideline to override a possible individual bias (2) even if UNSG believes something is threatening, article 99 only enables him to bring it to the attention of UN Security Council and nothing beyond that.

In the case of Sri Lankan Tamil ethnic cleansing, China has been a major partner in the crime and it sits with its Veto power in UNSC (along with its ally Russia in this case) to prevent any useful political/military action against the genocidal Sri Lankan regime. So the path of Article 99 will never be able to lead to an independent genocide investigation or a referendum for an independent Tamil nation in the island or an ensuing birth of a new nation.

Comments

Popular posts from this blog

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க:  http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூ...

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற...

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம் நாள்: 02 மார்ச் , 2013 , மாலை 4.00 மணி இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். 1.        T.S.S மணி, மனித உரிமை போராளி 2.        இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர் 3.        மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர் 4.        நாகராஜன், Global Tamil Organization 5.        செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்     மேலும் பலர்  கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன: T.S.S. மணி : ·         இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்...