Skip to main content

Posts

பொலீவியா விருதும், ஜோர்டான் விஜயமும்..

பொலீவியா தனது அதிஉயர் மனிதநேய, சனநாயக விருதை இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு வழங்கி இருப்பதை இப்போது தமிழர்கள் பரவலாக எதிர்ப்பதும், கவலை தெரிவிப்பதும் காண முடிகிறது.  பொலீவியாவின் செயலை எதிர்ப்பதும், புறக்கணிப்பதுமே சரியான எதிர்வினையாக இருக்கும் என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையில் அதை தாண்டிய நான்கு முக்கியமான வேலைகள் நம் கண்முன் நிற்கின்றன. 1. புலிகளின் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையினை ஆராய்ந்து, அதை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் முறைகளை நாம் ஆராய வேண்டும். புலிகளின் மீதான தடை நீக்கப்பெருதல் அனைத்திலும் முதன்மையான தேவை ஆகும். உலகெங்கிலும் விரைந்து செயல்பட முடியாமல் தேங்கி நிற்கும் பல உண்மை உணர்வாளர்களுக்கு கட்டுடைத்ததை போல ஆகும். ஐநா விசாரணை தொடங்க உள்ள இந்த நிலையில், மேலும் பலர் துணிவுடன் சாட்சிகளாக முன்வருவார்கள். இல்லாத போது இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய சட்டப்படியான தடையை கருதி தயங்க கூடும். 2. வடக்கிலும் – கிழக்கிலும் ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நிலங்களின் மீதே / இ
Recent posts

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க:  http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூபா, வியட்நாம்

ஐநா விதி 99 என்கிற ஏமாற்று பிரச்சாரம் - UNSG Article 99 and its deliberate misinterpretation and disinformation

ஐநாவின் 99 ஆவது சட்ட விதியின் படி அதன் பொது செயலாளர் இனப்படுகொலைக்கான விசாரணையை தொடங்க முடியும் என்றும், அதை தொடர்ந்து தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் சிலர் இங்கு தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர். இது ஒரு பொய் பிரச்சாரம்.. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.. இது பற்றிய ஒரு விளக்கம் இங்கே.. 99 ஆவது சட்ட பிரிவு என்பது என்ன? United Nations என்ற ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னர் இருந்த League of Nations அமைப்பின் நீட்சியாகவே திருத்தியமைக்கப்பட்ட ஒரு அதிகாரம் ஐநாவின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்டது. அதன் சட்ட வரையறைகள் பற்றிய ஆங்கில பதிவு இங்கே.. " The Secretary-General may bring to the attention of the Security Council any matter which in his opinion may threaten the maintenance of international peace and security "  இதன் தோராயமான தமிழாக்கம் இதோ: "உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடிய நிகழ்வுகளை தனது சுய மதிப்பீட்டின் அடிப்படையில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் கவனத்திற்கு கொண்டு வரலாம் " Ref: http://www.un.org/en/documen

மே 17 இயக்கத்திற்கான கேள்விகள் - நேருக்கு நேராக..

இணையவழி குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கள்ளமௌனம் காத்து வந்தது மே 17 இயக்கம். எனவே நேற்று இரவு அவர்கள் தி.நகரில் நடத்திய கூட்டத்தில் நேரில் சென்று அச்சு பிரதிகளாக எங்கள் கேள்விகளை கொடுத்து கேள்வி எழுப்பி இருக்கிறோம். சில மணிகளுக்கு முன்பு (16.03.2014) தி.நகரில் நடந்த மே பதினேழு இயக்கத்தின் கூட்டத்தில் நானும் தோழர் ராஜா ஸ்டாலினும் கலந்து கொண்டு அவர்கள் முன்வைக்கும் தவறான கொள்கையை சுட்டிக்காட்டும், கேள்வி எழுப்பும் விளக்க கட்டுரையை வந்திருந்தவர்களிடமும், ஒருங்கிணைப்பாளர்கள் Thirumurugan Gandhi மற்றும் Umar Chennai ஆகியோருக்கும் கையளித்தோம். அமெரிக்கா எனும் பூச்சாண்டியை பூதக்கண்ணாடி வைத்து பெரிது படுத்தி, அதன் மூலம் இந்தியா, சீனா, ரசியா, ஜப்பான் உட்பட உலக நாடுகளை, ஏன் சொல்லப்போனால் இலங்கை அரசை கூட இரண்டாம் கட்ட எதிரிகளாக பாவமன்னிப்பு  கொடுக்கின்றனர். இதன் மூலம் உண்மையான் எதிரிகளை தப்ப வைத்து இரண்டாம் எதிரியான அமெரிக்காவை முதல் எதிரியாக காட்டும் மடைமாற்று வேலையை செய்கின்றனர். அமெரிக்கா அயோக்கியன் என்ற போதும், அவனை விட ஈழ துரோகத்தில் முந்தி நிற்கும் இந்தியா, சீனா, ரசியா, கியூபா

ஈழ விடுதலையும், மாயமான் வேட்டையும்..

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐநா அவையில் கொண்டு வரும் தீர்மானம் அயோக்கியத்தனமானது, அதை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்கிற ஒற்றை வாதத்தை மட்டுமே கேட்டு பழகிய உங்களுக்கு இந்த மாற்றுக்கருத்தை ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மையை யாருக்கும் அஞ்சாமல் உரைப்பது எங்கள் கடமையாகிறது. யார் எதிரி? தமிழர்களை வரலாற்று ரீதியில் எதிரிகளாக சித்தரித்து, அவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை பொது புத்தியில் வளர்த்த புத்த பிக்குகள் முதல் இன்று தமிழின அழிப்பை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் இலங்கை அரசு வரையிலான சிங்கள கட்டமைப்பே ஈழத்தமிழர்களின் ஒரே நிரந்தர எதிரி. இதில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் இது இனப்படுகொலை என்பதாலும், தன் இனத்தின் எதிர்காலம் சிதைகிறது என்பதாலும் மனிதாபிமான நோக்கில் பார்கின்றனர். சிங்களம் தமிழர்களை அழிப்பதன் மூலம் அவர்களது தாயக நிலங்களை ஆக்கிரமித்து இலங்கை தீவினை ஒரு முழு சிங்கள தேசமாக மாற்ற முயல்கிறது. இந்த இருவர் மட்டுமே இதில் நேரடியான நீண்டகால நோக்கம் கொண்டவர்கள். ஒன்று விடுதலை கோரி.. மற்றொன்று ஆக்கிரமிப்பு நடத்த.. உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் தத்

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம் நாள்: 02 மார்ச் , 2013 , மாலை 4.00 மணி இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். 1.        T.S.S மணி, மனித உரிமை போராளி 2.        இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர் 3.        மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர் 4.        நாகராஜன், Global Tamil Organization 5.        செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்     மேலும் பலர்  கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன: T.S.S. மணி : ·         இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் போர்குற்ற புலனாய்வு நடந்தாலும் அதன் ஒரு பகுதியான “இனப்படுகொலை போர் குற்றம் ” ( Genocidal War Crimes) வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் போர்குற்ற விசாரணை என்ற பெயரை கேட்டு குழப்பம் அட